கொவிட் டோசிலிசுமாப் (Tocilizumab)என்ற தடுப்பூசியைக் கடத்தி விற்பனை செய்தவர்கள் வலையில் …(Video)
தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் (என்டிஆர்ஏ) உணவு மற்றும் மருந்து ஆய்வாளர்கள், கோவிட் 19 தீவிர நோயாளிகளுக்கு ரூ. 10 லட்சம் முதல் 12 லட்சம் வரை சிறப்பு டாக்டர்களால் பரிந்துரைக்கப்பட்ட மருந்தை சட்டவிரோதமாக இறக்குமதி செய்து விற்பனை செய்யும் மருந்து மாஃபியாவை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த மோசடியை நீண்ட காலமாக கண்காணித்து வந்த அதிகாரிகள், நேற்றுமுன்தினம் இந்த மோசடியில் ஈடுபட்ட இரண்டு நபர்களை கைது செய்து விசாரித்ததில் இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. ரூ .7 இலட்சம் முதல் ரூ .10 இலட்சம் வரை தடுப்பூசியை விற்கும் தரகர்களை பின் தொடர்ந்த போது சிக்கிக் கொண்டனர். இந்த மருந்தானது கடுமையான நோயுற்ற கோவிட் நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
டோசிலிசுமாப் தடுப்பூசியின் தயாரிப்பு உரிமம் சுவிட்சர்லாந்தின் உலகப் புகழ்பெற்ற மருந்து நிறுவனமான Rocheக்கு உரியதாகும். .
மோசடி செய்பவரின் வீட்டின் குளிர்சாதன பெட்டியில் இதுபோன்ற ஐந்து தடுப்பூசிகளை அதிகாரிகள் கண்டுபிடித்தனர் மேலும் சந்தேக நபர்கள் ஒரு தடுப்பூசியை ரூ. 7 லட்சம் வீதம் 42 லட்சத்துக்கு விற்பதற்கு இருந்துள்னர். ஏழு தடுப்பூசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. நாட்டில் உள்ள புகழ்பெற்ற வர்த்தக நிறுவனம் ஒன்றுக்கு மட்டுமே இந்த தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுகிறது. மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின்படி, சுவிட்சர்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் தடுப்பூசியின் விலை சுமார் ரூ .1’25,000 ஆகும். இருப்பினும், தடுப்பூசி பரிந்துரைக்கப்பட்ட (கோட்டா) அளவுகளே வழங்கப்படுகிறது.
ஆனால் கோவிட் 19 பரவியதால், இந்த தடுப்பூசியின் தேவை வேகமாக அதிகரித்தது. இந்த தடுப்பூசி குறித்து நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது மற்றும் கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட பல பணக்காரர்கள் தடுப்பூசியை நூறாயிரக்கணக்கான ரூபாய்க்கு வாங்கியதாக சமூகத்தில் பேசப்பட்டது.
சிறப்பு மருத்துவர்கள் பரிந்துரைத்த தடுப்பூசியின் தேவை அதிகம் என்பதால் , நாட்டில் உள்ள மருந்தகங்கள், மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களில் , இந்த தடுப்பூசியை பெற முடியாத நிலை உள்ளமையால் , சில இலங்கை தொழிலதிபர்கள் இந்தியா உட்பட பிற நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக தடுப்பூசியை இறக்குமதி செய்துள்ளனர். ஆய்வாளர்கள் கூறுகையில், சிறிய கட்டணத்தில் மொத்தமாக இறக்குமதி செய்யப்படும் இந்த தடுப்பூசியை குறித்த நபர்கள் , குளிர்சாதன பெட்டியில் வைத்து தரகர்கள் மூலம் அதிக விலைக்கு விற்கிறார்கள்.
இந்த தடுப்பூசி விற்பனை தொடர்பாக பேஸ்புக் கணக்கில் வெளியிடப்பட்ட ஒரு விளம்பரத்தின் மூலம் தெரிய வந்த போது , அது குறித்து விசாரணையைத் தொடங்கிய அதிகாரிகள், தீவிர நோய்வாய்ப்பட்ட கோவிட் நோயாளிக்கு ஒரு தடுப்பூசி தேவை என அழைப்பொன்றின் மூலம் பேசிய போது ஒரு தடுப்பூசியின் விலை ரூ. 10 லட்சம் என தரகர் கூறியிருந்தார். பின்னர் அது ரூ .700,000 ஆக குறைக்கப்பட்டது. அதன்பின் தடுப்பூசியுடன் வெள்ளவத்தைக்கு வரலாம் என்று தரகர் கூறியிருந்தார். அதன் பின்னர், அவரின் இடத்தை சுற்றி இருந்த ஆய்வாளர்கள் சந்தேக நபரைப் பிடித்து, அவர் தடுப்பூசியை எப்படி பெற்றார் என்று கேட்டபோது, அவர் வெள்ளவத்தை பகுதியில் உள்ள ஒரு மருந்தகத்தில் வேலை செய்யும் ஊழியர் என்றும் அவருக்கு நாரஹேன்பிட்ட பகுதியைச் சேர்ந்த ஒருவரால் தடுப்பூசி கிடைத்தது எனவும் தெரிவித்துள்ளார்.
இதிலிருந்து பெறப்படும் பணத்தில் தனக்கும் , தடுப்பூசி கொடுத்த நபருக்கும் 1 லட்சம் வீதம் கிடைப்பதாகவும் தெரவித்துள்ளார். அவருக்கு தடுப்பூசி கொடுத்த நாரஹேன்பிட்ட மனிதர் சில கெஜம் தொலைவில் இருந்து நடப்பதை பார்த்துவிட்டு ,அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் அவரைத் தொடர்புகொள்ள எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்ததால், சந்தேகநபரின் கைபேசியை அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையின் போது, அவருக்கு தடுப்பூசி கொடுத்த பலரின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இரண்டாவது சந்தேகநபர் மற்றொரு டோசிலிசிமாப் தடுப்பூசியை எடுத்துச் சென்ற போது அவரையும் அதிகாரிகள் , நவலோகா மருத்துவமனைக்கு அருகிகே வாகனத்தில் வந்த அவரை அதிகாரிகள் கைது செய்தனர்.
பின்னர், அவருக்கு தடுப்பூசி எப்படி கிடைத்தது என்று கேட்டபோது, பொரளை மில்லினியத்தை சேர்ந்த ஒருவர் தனக்கு கொடுத்ததாக அதிகாரிகளிடம் கூறினார். பின்னர் அவருடன் சம்பந்தப்பட்ட நபரின் வீட்டிற்கு சென்ற அதிகாரிகள் அவரது வீட்டின் குளிர்சாதன பெட்டியில் மேலும் ஐந்து தடுப்பூசிகள் இருப்பதை கண்டனர். அதையெல்லாம் அதிகாரிகள் காவலில் எடுத்துள்ளனர்.
சந்தேகநபர் தனது குடியிருப்பாளர்களின் நலனுக்காக தடுப்பூசியை வைத்திருப்பதாகவும், அதற்கான உரிமம் தன்னிடம் உள்ளதாகவும் கூறினார். இந்தியாவில் இருந்து தனது நண்பர்கள் மூலம் ஒரு சேவையாகவே அதை வழங்குவதற்கு தடுப்பூசி பெற்றதாக அவர் கூறினார். எனினும், தடுப்பூசிகளை மொத்தமாக வீட்டில் வைக்க முடியாது என மருந்தக ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் சந்தேக நபருக்கு சுட்டிக்காட்டியுள்ளனர். பின்னர் அவரை பொரளை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது.
சந்தேகநபர் கடந்த பொதுத் தேர்தலில் தற்போதைய எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளராக போட்டியிட்டதாகவும் , அவரது வீட்டின் முன் சுவர்களில் , அது குறித்த சுவரொட்டிகளை காண முடிந்தது எனவும் சுகாதார ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இவர் முன்னாள் வானொலி தமிழ் அறிவிப்பாளரும், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கேகாலை மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளருமான M.பரணிதரன் என தெரிய வந்துள்ளது.
தடுப்பூசிகள் விமானங்களின் மூலம் இறக்குமதி செய்யப்பட்டவை என்பதோடு , அங்கீகரிக்கப்பட்ட விதிகளை மீறி தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்னர்.
இறக்குமதி செய்யப்பட்ட தடுப்பூசிகளை , கடுமையான நோயாளிகளுக்கு கொடுக்க 1 மில்லியன் ரூபாய்க்கு விற்றிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
சந்தேக நபர்கள் மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
டாக்டர் ரசிதா விஜேவந்த, நிபுணர், தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத் தலைவர், திரு. கமல் ஜெயசிங்க, தலைமை நிர்வாக அதிகாரி, உணவு மற்றும் சுகாதார ஆய்வு மற்றும் தலைவர் (சட்ட அமலாக்கம்), அமித் பெரேரா, உணவு மற்றும் மருந்து ஆய்வாளர்கள், மஹிந்த சிறிகுமாரா தலைமையில் சந்தன வீரகோன் அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டனர்.