போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் வெவ்வேறு இடங்களில் 7 பேர் சிக்கினர்.
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலெவத்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 44 கிராம் 460 மில்லிகிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நபரே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டேசன்புர பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 7 கிராம் 170 மில்லிகிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஹெரோய்ன் விற்பனையில் பெற்றுக்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் 5 இலட்சத்து 15 ஆயிரம் ரூபா பணத்தையும் இதன்போது குறித்த நபரிடமிருந்த பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கிராண்ட்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அதேபோன்று இலுக்தென்ன பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், 36.5 லீற்றர் மதுபானம், 270 லீற்றர் கோடா, செப்புக்கள் இரண்டுடன் சந்தேகநபர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நிவித்திகல பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே கஹவத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் 67.5 லீற்றர் மதுபானம், 270 லீற்றர் கோடா, இரண்டு எரிவாயு அடுப்புகள், இரண்டு செப்புகள் என்பவற்றுடன் இருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். நிவித்திகல பிரதேசத்தைச் சேர்ந்த 39, 38 வயதுடையவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.