யாழ்ப்பாணத்தில் மேலும் நால்வர் கொரோனாவால் பலி!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 4 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று உயிரிழந்துள்ளனர்.
பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பருத்தித்துறையைச் சேர்ந்த 85 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கைதடி முதியோர் இல்லத்தைச் சேர்ந்த 81 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கோண்டாவிலைச் சேர்ந்த 69 வயதுடைய ஆண் ஒருவரும், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 66 வயதுடைய பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.