அத்தியாவசியமற்ற இறக்குமதி பொருட்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் : மத்திய வங்கி அறிவிப்பு.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் 623 பொருட்களுக்கு நூற்றுக்கு நூறு வீத உத்தரவாதத் தொகையை இறக்குமதியாளர்கள் வைப்பிலிட வேண்டும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
கையடக்கத் தொலைபேசிகள், தொலைபேசிகள், தொலைக்காட்சி, கைக்கடிகாரம், குளர்சாதனபெட்டி, றப்பர் டயர்கள், பழங்கள், குளிரூட்டிகள், குளிர்பானங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் உள்ளிட்ட 623 எச்எஸ் குறியீடு பொருட்களை இறக்குமதி செய்ய, நூற்றுக்கு நூறு வீத உத்தரவாதத் தொகையை இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் இந்த அவசர அறிவிப்பை அடுத்து, குறிப்பிட்ட பொருட்களுக்கு எதிர்காலத்தில் பாரிய தட்டுப்பாடு ஏற்படும் சாத்தியம் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், இந்த பொருட்களுக்கான விலைகளும் பல மடங்காக அதிகரிக்கும் என குறிப்பிடப்படுகின்றது.