பிரதமர் மகிந்த ராஜபக்ச இத்தாலி பயணமானார்.

இத்தாலிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட தூதுக் குழுவினர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று (10) அதிகாலை புறப்பட்டனர்.
இவ்விஜயத்தின்போது பிரதமர் ஜி20 சர்வமத மற்றும் கலாசார மாநாடு – 2021 இன் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு தலைமை உரை ஆற்றவுள்ளவுடன், இராஜதந்திர சந்திப்புகளிலும் கலந்து கொள்ளவுள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், பிரதமரின் செயலாளர் திரு.காமினி செனரத் உள்ளிட்ட தூதுக் குழுவினர் பிரதமருடன் இவ்விஜயத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.