நாடு மீண்டும் திறக்கப்பட வேண்டுமெனில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு!
நாடு மீண்டும் திறக்கப்பட வேண்டுமாக இருந்தால் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டல்களுடனான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் கோவிட் தடுப்பு செயலணியுடனான விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றிருந்தது. இதன்போதே தேசிய கோவிட் தடுப்புச் செயலணியின் தலைவரான இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவிடம் ஜனாதிபதி குறித்த அறிக்கையை கோரியுள்ளதாக தெரியவருகிறது.
நாட்டில் கோவிட் தொற்று தீவிரமடைந்த நிலையில் கடந்த 20ஆம் திகதி இரவு பத்து மணி முதல் தனிமைப்படுத்தல் உத்தரவு இலங்கையில் அமுல்படுத்தப்பட்டது.
இதனையடுத்து தொடர்ச்சியாக தனிமைப்படுத்தல் ஊரடங்கானது நீடிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று மீண்டும் குறித்த உத்தரவு நீடிக்கப்பட்டு எதிர்வரும் 21ஆம் திகதி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.