வடக்கில் ‘டெல்டா’ தாண்டவம்! 199 பேரின் மாதிரிகளில் 113 பேருக்குத் தொற்று உறுதி.
இலங்கையில் 95.8 சதவீத கொரோனாத் தொற்றுக்கள் டெல்டா வைரஸால் ஏற்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளன. அதேவேளை, வடக்கு மாகாணத்தில் 199 பேரின் மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்தியபோது 113 பேர் டெல்டா திரிபினாலும், 10 பேர் அல்பா திரிபினாலும் பாதிக்கப்பட்டமையும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் நுண் உயிரியல் துறையினால் எடுக்கப்பட்ட மாதிரிகளின் பகுப்பாய்வில் இது தெரியவந்துள்ளது.
பேராசிரியர் நீலிகா மாளவிகே மற்றும் மருத்துவர் சந்திம ஜீவந்தர ஆகியோரால் ஆய்வு முன்னெடுக்கப்பட்டது.
ஒவ்வொரு மாகாணத்திலும் டெல்டா வைரஸ் திரிபு 84 முதல் 100 சதவிகிதம் வரை பரவியிருப்பதும் தெரியவந்துள்ளது.
பகுப்பாய்வு செய்யப்பட்ட 881 பேரின் மாதிரிகளில் 592 பேருக்கு டெல்டா வைரஸ் பாதிப்பு உள்ளமை தெரியவந்துள்ளது.