ஆயுர்வேத வைத்தியசாலை கட்டில்களில் 48 சதவீதம் தொற்றாளர்களுக்கு சிகிச்சை.
ஆயுர்வேத வைத்தியசாலை கட்டமைப்பிலுள்ள கட்டில்களில் நூற்றுக்கு 48 சதவீதத்தை கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆயுர்வேதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆயர்வேத வைத்தியசாலை கட்டமைப்பில் 5 ஆயிரம் கட்டில்கள் காணப்படுகின்றன.
இதற்கமைவாக ஆயுர்வேத வைத்தியசாலைகளின் கட்டில்களில் ஒரு தொகுதியை கொரோனாத் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக ஒதுக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக ஆயுர்வேத ஆணையாளர் வைத்தியர் தம்மிக்க அபேகுணவர்தன ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
முதற்கட்ட நடவடிக்கையாக பொரளை ஆயுர்வேத வைத்தியசாலை உள்ளிட்ட 16 வைத்தியசாலை கட்டமைப்பில் உள்ள 1300 கட்டில்கள் கொரோனாத் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்குத் தயார் நிலையில் இருக்கின்றன எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.