டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடவுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி.
டி20 உலகக் கோப்பை – ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபை, அபு தாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை போட்டி, கரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது
இந்நிலையில் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கவுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பொலார்ட் தலைமையிலான அணியில் ஆல்ரவுண்டர் நரைன் தேர்வாகவில்லை. ஐபிஎல், சிபிஎல் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வந்தாலும் 2019-லிருந்து சர்வதேச டி20 ஆட்டங்களில் நரைன் விளையாடவில்லை என்பதால் அவர் தேர்வாகவில்லை. மேலும் மாற்று வீரர்களில் ஒருவராகவே ஜேசன் ஹோல்டர் தேர்வாகியுள்ளார். கடைசியாக 2015-ல் விளையாடிய ரவி ராம்பால், மே.இ. தீவுகள் அணியில் மீண்டும் இடம்பெற்றுள்ளார்.
மே.இ. தீவுகள் அணி
பொலார்ட் (கேப்டன்), ஹெட்மையர், ஹேடன் வால்ஷ் ஜூனியர், நிகோலஸ் பூரன், எவின் லூயிஸ், ஃபேபியன் ஆலன், ஒபெட் மெக்காய், டுவைன் பிராவோ, ரவி ராம்பால், ராஸ்டன் சேஸ், ஆண்ட்ரே ரஸ்ஸல், ஆண்ட்ரே ஃபிளெட்சர், லெண்டில் சிம்மன்ஸ், கிறிஸ் கெய்ல், ஒஷானே தாமஸ்.
மாற்று வீரர்கள்: டேரன் பிராவோ, ஷெல்டன் காட்ரெல், ஜேசன் ஹோல்டர், அகேல் ஹுசைன்.