வீட்டுத் தோட்டம் செய்பவர்களுக்கான விதை பக்கட்டுக்கள் வழங்கி வைக்கப்பட்டன!
காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் சமுர்த்தி குடும்பங்களுக்கான தேசிய வீட்டுத் தோட்ட அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இந்த விதைப் பக்கட்டுக்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந்த வைபவம் புதிய காத்தான்குடி வடக்கு 167A கிராம சேவகர் பிரிவில் காத்தான்குடி பிரதேச செயலாளர் யு. உதய ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.
இந்த வைபவத்தில் காத்தான்குடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி எம்.எஸ் .சில்மியா காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் திருமதி சுபந்தினி கண்ணன் சமுர்த்தி வலய முகாமையாளர்களான ஏ.எல்.இசட் பஹ்மி, எஸ்.எச். முஸம்மில் கருத்திட்ட உதவியாளர் ஏ.எல்.எச் இப்ராஹிம் பிரிவு சமுர்த்தி உத்தியோகத்தர் திருமதி அனிசா ரஊப் உட்பட சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்
இதன்போது வீட்டுத்தோட்டம் செய்பவர்களுக்கான மரக்கறி விதைப்பக்கட்டுக்கள் வழங்கிவைக்கப்பட்டது.
காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் 1800 விதை பக்கெட்டுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.