நான்கு கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் மூவர் சிக்கினர்.
களனி மற்றும் கிரிபத்கொடை ஆகிய பிரதேசங்களில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில், நான்கு கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கிரிபத்கொட, களனிய, கடுவலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து 262 கேரள கஞ்சாவும், கேரள கஞ்சா விற்பனையில் பெற்றுக்கொள்ளப்பட்ட 10 இலட்சம் ரூபா பணத்தையும் விசேட அதிரடிப் படையினர் இதன்போது கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபர்கள் மோட்டார் சைக்கிள் மற்றும் கெப் ரக வாகனத்தில் கேரள கஞ்சாவுடன் பயணித்த நிலையிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்கேகநபர்கள் விசாரணைகளின் பின்னர் போதைப்பொருள் கடத்தல், விற்பனை செய்தல் மற்றும் உதவி புரிந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.