மத்திய வங்கி ஆளுநர் W.D. லக்‌ஷ்மன் பதவி விலக காரணம்?

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியிலிருந்து அடுத்த வாரம் தாம் விலகுவதாக பேராசிரியர் W.D. லக்‌ஷ்மன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஒன்லைனில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

அடுத்த மாதம் எனது 80 ஆவது பிறந்த தினத்தின் பொழுது ஓய்வு பெற தீர்மானித்திருந்தேன். எனினும் கடந்த ஒருவாரத்துக்குள் மன வேதனையை ஏற்படுத்தும் சம்பவங்கள் காரணமாக எனது தீர்மானத்தை 6 வாரங்களுக்குள் உட்படுத்தியுள்ளேன். எனவே எதிர்வரும் 14 ஆம் செவ்வாய்க்கிழமை விலகுவதற்கு எதிர்பார்த்துள்ளேன்.

நான் எனது பொறுப்புக்களை இரவு பகல் பாராது நிறைவேற்றினேன் எனினும் சமூக மற்றும் மனிதாபிமான அழுத்தங்கள் காரணமாக எனது இலக்குகளை அடைய முடியாமல் போனது. நான் பதவியேற்று 3 மாதங்களில் அதாவது 2020 மார்ச் மாதத்தில் இருந்து ஏற்பட்ட கொவிட் தொற்றும் இதில் தாக்கம் செலுத்தியது.

அதேபோன்று மேலும் பல மனிதாபிமான மற்றும் நிறுவனங்கள் சார்ந்த விடயங்களும் இதில் தாக்கம் செலுத்தியது. இவ்வாறான சிரமங்களுக்கு மத்தியிலும் கொள்கை மாற்றங்கள் தொடர்பில் சிந்தித்து செயற்பட்ட போது மன உழைச்சலுக்குள்ளான பல சந்தர்ப்பங்கள் உள்ளன. எனவே என்னையும் என்னை நேசிப்போரையும் ஆசிர்வதிக்கும் வகையிலேயே நான் இந்த பதவியில் இருந்து விலகிச் செல்கின்றேன்.

சர்வதேச நாணய நிதியத்தின் பதவியை ஏற்றுக்கொள்வீர்களா என கேட்கப்பட்டதற்கு?

சர்வதேச நாணய நிதியத்தில் உயர்ந்த சம்பளம் மற்றும் பல வசதிகள் கொண்ட நிறைவேற்றுப் பணிப்பாளர் பதவியை அடுத்த ஒருவருடத்துக்கு ஏற்றுக்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது எனக்கு கிடைத்த பெரும் பரிசாக இருந்தாலும் நான் அதனை நிராகரித்தேன் . ஓய்வு பெற்றதன் பின்னர் ஓய்வில் இருக்க நினைக்கின்றேன் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.