தற்கொலைக்கு முயன்ற சிறுமி வைத்தியசாலையில் சாவு! பரிசோதனையில் கொரோனா உறுதி.
தவறான முடிவெடுத்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் கடந்த 09ஆம் திகதி யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட சிறுமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
எழுதுமட்டுவாழ், கரம்பகம் பகுதியைச் சேரந்த 11 வயதான சிறுமியே சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
எழுதுமட்டுவாழ் – கரம்பகம் பகுதியில் கடந்த 08 மாதங்களாக உறவினர் ஒருவரின் வீட்டில் குறித்த சிறுமியும் தாயாரும் வசித்து வந்துள்ளனர்.
கடந்த 9ஆம் திகதி குறித்த சிறுமிக்கும் குடும்பத்தினருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாகவே சிறுமி தவறான முடிவை எடுத்து உயிரை மாய்க்க முயற்சி செய்தார் என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்தது.
இதேவேளை, சிறுமிக்கு நேற்றுமுன்தினம் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கொரோனாப் பரிசோதனையின்போது கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.