திரிபுரசுந்தரி என்றால் மூவுலகிலும் பேரழகி என்று பொருள்!
திரிபுர சுந்தரி! இந்த பேரழகிக்கு லலிதா என்ற பெயரும்,இராஜராஜேஷ்வரி என்ற பெயரும் உண்டு! அன்னை பராசக்தியின் அம்சமே திரிபுரசுந்தரி!
அதாவது அன்னை பராசக்தி ஆனவள் தசவித்யாவாக காட்சி தருகிறார்!
அதாவது தாய்மையின் பத்துவிதமான உணர்வுகளை,குணங்களை உலகிற்கு உணர்த்துவதற்காக பத்து அவதாரங்களாக திகழ்கிறார் அவற்றில் ஒன்றுதான் திரிபுர சுந்தரி அவதாரம். இதன் தத்துவம் என்னவென்றால் பெண்ணால் ஆக்கவும் முடியும்!அழிக்கவும் முடியும் என்பதாகும்.
அன்னை பராசக்தியின் பத்து தேவியர்களில் காளி,மாதங்கி,பைரவி,புவனேசுவரியும் அடங்குவார்கள்!
இந்த தேவியரைதான் கன்னியம்மன், மாரியம்மன், செல்லியம்மன், காளியம்மன் என்றெல்லாம் அம்மனை வெவ்வேறு பெயர்களின் சொல்லி வழிபடுகிறோம். ஒவ்வொரு வடிவமாகக் கொண்டிருக்கும் அம்பிகையைக் கொண்டாடுகிறோம்.
அந்த வடிவங்களில் மிகவும் வித்தியாசமானவள்! நம்மை குழந்தை போல் பாவித்து அருள்பாலிக்கும் அன்னையே, குழந்தையாக, சிறுமியாக இருந்து அருள்பாலிக்கும் தெய்வம் திரிபுரசுந்தரி.
பாலா திரிபுரசுந்தரி கருணைக் கடல். அன்பே உருவெனக் கொண்டவள். அருளையே வடிவமெனக் கொண்டவள். தீயதை அழிப்பதையே காரணமாகக் கொண்டு காட்சி தருபவள்.
பாலா திரிபுரசுந்தரியை வணங்குங்கள். அவளின் காயத்ரியைச் சொல்லுங்கள். ஒரு பத்துநிமிடம் கண்கள் மூடி, எந்தநாளாக இருந்தாலும் அவளிடம் உங்கள் குறைகளையெல்லாம் சொல்லி முறையிடுங்கள். சொன்ன சொல் மாறாத குழந்தையென ஒரு தாயைப் போல் ஓடிவந்து நம்மைக் காத்தருள்வாள் தேவி.