மாபெரும் வரவேற்பை பெற்ற அண்ணாத்த மோஷன் போஸ்டர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும் தற்போது இவர் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படம் மிக பெரியளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில் சமீபத்தில் அண்ணாத்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.
இந்நிலையில் அண்ணாத்த மோஷன் போஸ்டரில் ரஜினி பைக் ஓட்டும் காட்சியை இணையத்தில் ரசிகர்கள் பலரும் விமர்சித்து வந்தனர்.
மேலும் தற்போது ரசிகர்கள் ரஜினிக்கு இது புதிதல்ல என 1982 ஆம் ஆண்டு வெளியான புதுக்கவிதை படத்தின் அன்ஸீன் போஸ்ட்டரை பதிவிட்டுள்ளனர்.