கிளிநொச்சியில் மேலும் இருவர் கொரோனாவால் சாவு!

கிளிநொச்சியில் இன்று உயிரிழந்த இருவருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அவர்கள் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சண்முகம் ஆசை (வயது 94), வைரவன் பாக்கியம் (வயது 84) ஆகியோரே கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களாவர்.