தமிழகத்திற்கு வழங்கப்படும் நிதிதொடர்பாக முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டை நிராகரித்த நிர்மலா சீதாராமன்

மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக உரிய ஆதாரத்துடன் சுட்டிக் காட்டினால் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் கூறி சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அன்பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துப் பேசுகையில், தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கப்படுவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக குற்றம்சாட்டப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, உரிய ஆதாரத்துடன் சுட்டிக் காட்டினால் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் விசாரிப்பதாக நிர்மலா சீதாராமன் கூறினார். பிரதமர் நரேந்திர மோடி அரசில் பாரபட்சம் காட்டப்படாது என்றும் அவர் கூறினார்.

இது குறித்து நிர்மலா சீதாராமன் கூறுகையில், விருதுநகர் மாவட்டத்திற்கு மூன்றாவது முறையாக ஆய்வு செய்ய நான் வந்துள்ளேன். இந்த மாவட்டத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன் மத்திய அரசின் ஒரு சில திட்டங்களில் இந்த மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் செயல்படுத்துவதில் பின் தங்கியுள்ளனர். அதனை விரைந்து செயல் படுத்துவதற்கான ஆலோசனைகளை நான் அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளேன். விருதுநகர் மாவட்டத்தில் குறிப்பாக குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகின்றது அதனை போக்க வீடு தோறும் குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தை துரிதப்படுத்த அறிவுறுத்தி உள்ளேன்.

இந்த மாவட்டத்தில் உள்ள கூலித் தொழிலாளர்கள் 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பயன் பெறும் வகையில் ஓய்வூதிய திட்டங்கள் மூன்று இருந்தாலும் ஒரு திட்டத்தில் மட்டுமே அதிகாரிகள் முன்னெடுத்துச் செல்கின்றனர் மற்ற திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க அறிவுறுத்தி உள்ளனர். சாலையோர வியாபாரிகள் மற்றும் சிறு குறு வியாபாரிகள் வாழ்க்கை மேம்பட தேவையான கடன் உதவிகள் விரைந்து வழங்க வங்கி அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளேன்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் இனாம் திட்டத்தின் மூலம் நாட்டிலுள்ள பிற மாநிலங்களுக்கு தங்களுடைய விளைபொருட்களை அன்றைய சந்தை மதிப்பிற்கு ஏற்றவாறு கணினி வாயிலாக விற்பனை செய்யும் இந்த திட்டத்தை 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் செயல்படுத்த மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்த மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் கால்நடை வளர்ப்பில் ஆர்வம் செலுத்தி வருவதன் காரணமாக ஒரு லட்சம் கால்நடைகள் உள்ள பகுதியில் நடமாடும் கால்நடை மருத்துவ குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர்கள் பணி அமர்த்தும் தேவையான நடவடிக்கைகள் இந்த மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் மூலமாக கால்நடைகளுக்கு ஏற்படும் நோயை உடனடியாகக் கண்டறிந்து கட்டுப்படுத்தவும் முடியும் அதே போன்று கால்நடைகள் மூலம் மனிதர்களுக்கு ஏற்படும் நோய் பரவுவதை தடுக்கவும் முடியும்.

தமிழகத்திற்கு வழங்கப்படும் நிதியில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக கூறுகின்றனர் உரிய ஆதாரத்துடன் சுட்டிக் காட்டினால் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் கூறி அதனை சரி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு எந்தவிதமான பாரபட்சமும் காட்டுவது இல்லை எனவும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

 

Leave A Reply

Your email address will not be published.