இலங்கை மத்திய வங்கி ஆளுநராக கப்ரால் நியமனம்.

2021 செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களினால், இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக அவர் தனது கடமைகளை, இம்மாதம் 15ஆம் திகதியன்று பொறுப்பேற்கவுள்ளார்.
பிரசித்திபெற்ற பட்டயக் கணக்காளரான அஜித் நிவாட் கப்ரால் அவர்கள், இதற்கு முன்னர் அமைச்சின் செயலாளராகக் கடமையாற்றியுள்ளதோடு, சுமார் 9 வருடக் காலப்பகுதி வரை, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.