பேரனின் சைக்கிளிலிருந்து தவறி வீழ்ந்த மூதாட்டி வைத்தியசாலையில் உயிரிழப்பு.

பேரனின் சைக்கிளில் பயணித்த மூதாட்டி ஒருவர் தவறி வீழ்ந்து மயங்கியதில் பரிதாபகரமாக உயிரிழந்தார்.
கொடிகாமம், மந்துவில் கிழக்கைச் சேர்ந்த பொன்னுத்துரை ஆசையம்மா என்னும் 80 வயதுடைய மூதாட்டியே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
அவர் மந்துவிலில் உள்ள மகளின் வீட்டில் இருந்து பேரனின் சைக்கிளில் இரண்டாவது மகளின் வீடு நோக்கிப் பயணித்த வேளை வீதியில் தவறி வீழ்ந்தமையால் மயக்கம் அடைந்துள்ளார்.
அவர் உடனடியாக சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபோது மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதன வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.