நோயாளர்கள் சிகிச்சைகளை பெறுவதற்கு தயக்கமுமின்றி பொது வைத்தியசாலையை நாடமுடியும்.
வவுனியா பொது வைத்தியசாலைக்கு செல்வதனால் அன்டியன் (antigen ) பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்ற அச்சம் காரணமாக வெளிநோயாளர்கள் பிரிவில் சிகிச்சை பெறக்கூடியவர்கள் கூட சிகிச்சைகளை பெற்றுக் கொள்வதில் தயக்கம் காட்டுகின்றனர் எனத் தகவல்கள் கிடைத்துள்ளது.
தற்போதைய கொரொனா கடுந்தொற்றிலிருந்து மக்களையும் நோயாளரையும் பாதுகாப்பதற்கு, தொற்றை முற்கூட்டி அடையாளப்படுத்துதலும்(Early Diagnosis) விரைவான உடனடி சிகிச்சையை (Immediate Treatment) உறுதிப்படுத்துதலும் அத்தியாவசியமானதாகும்.
கடும் சுவாச சிக்கலுடன், நாட்பட்ட நிலையில் சிகிச்சைபெற வைத்தியசாலைக்கு வரும் கொரொனா நோயாளர்களுக்கே சிகிச்சை பலனின்றிபோகும் சாத்தியம் அதிகம் என்பதுடன் மரணத்தையும் ஏற்படுத்த வல்லது மேலும் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு முன்கூட்டியே தொற்று கண்டறியப்படும் நோயாளர்களை விரைவாக குணப்படுத்த முடியும் என்பது விஞ்ஞானபூர்வமாக உறுதிப்படுத்தப்படுள்ளது.
கொரொனா தொற்றுநிலை, தனிமைப்படுத்தல் ஊரடங்கு மற்றும் பொருளாதார முடக்கநிலை காரணமாக, ஏற்கனவே கடும் சமுக பொருளாதார நெருக்கடிக்கு உட்பட்டுள்ள வவுனியா பிராந்திய மக்கள் வைத்திய சேவைக்காக எப்பொழுதும் மாவட்ட பொதுவைத்தியசாலையை நாடலாம்.
வெளிநோயாளர் பிரிவில் சாதாரணமாக சிகிச்சை பெறகூடிய நிலை காணப்படுவதுடன் கொரொனா நோயாளர்களோ அல்லது கொரொனா அல்லாத பிற நோயாளர்களோ மருத்துவ ஆலோசனை தேவைப்படுவதாக உணருமிடத்து, தயக்கமின்றியும், தாமதமின்றியும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு உடனடியாக வருகை தந்து சிகிச்சைகளையும் மருந்துவ ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ள முடியும்.
“நாட்டு மக்களின் உயிர் காப்பதே எமது தலையாய கடமை ஆகும் “