அரசாங்க தரவுத்தளத்தின் வலைத்தளங்கள் நேற்று செயலிழந்தன!

லங்கா கவர்மென்ட் கிளவுட் அல்லது இலங்கை அரசாங்க கிளவுட் சிஸ்டத்தில் வைக்கப்பட்டுள்ள பல அரசாங்க வலைத்தளங்கள் நேற்றிரவு ஹேக் செய்யப்பட்டு செயலிழந்தன.
அவை தற்போது மீளமைக்கப்பட்டு வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப முகமையின் (ICTA) தலைவர் ஒஷாத சேனாநாயக்க தெரிவித்தார்.