துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் மரணம்!

மாத்தறை மாவட்டம், கொட்டவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 29 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நபரின் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
மிதிகம, அஹங்கம பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுயடை குடும்பஸ்தரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்குப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.