தனியார் மருத்துவமனையில் கைக்குண்டு மீட்பு..

நாராஹென்பிட்டி தனியார் மருத்துவமனையின் முதலாம் மாடியில் உள்ள கழிப்பறையில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி இதனையடுத்து, குறித்த மருத்துவமனையும் அதனை அண்டிய பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
மேலும் ,முக்கிய பிரமுகர்கள் இந்த வைத்தியசாலைக்கு வருவதால் அவர்கள் எவரையாவது இலக்கு வைத்து இது கொண்டுவரப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணைகள் நடத்தப்படுகின்றன.