மும்பையில் அரை தூக்கத்தில் பேஸ்டை எடுத்து பல்லை தேய்த்த பெண் நொடியில் பரிதாபமாக பலியான சோகம்!

மும்பை தாராவியைச் சேர்ந்த 18 வயதான பெண் அஃப்சனா கான், இவர் கடந்த ஞாயிறு அன்று வழக்கம் போல எழுந்து பல்தேய்ப்பதற்காக அரை தூக்கத்தில் பேஸ்டை எடுத்து பல்லை தேய்த்துள்ளார்.
அப்பொழுது பேஸ்ட்டின் டேஸ்ட் வேறு மாதிரியாக இருந்ததை நினைத்து உஷாராகி எடுத்து பார்த்த போது அது பேஸ்ட் இல்லை எலி மருந்து என தெரிந்தது.
உடனே அவர் அதை துப்பிவிட்டு வாயை கொப்பாளித்துவிட்டு பின்பு சாதாரணமாக இருந்துள்ளார். முதலில் எந்த விதமான பாதிப்பும் இல்லாமல் இருந்தது. பின்னர் சிறிது நேரத்திற்கு பிறகு மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதை வீட்டில் சொன்னால் திட்டுவார்கள் என பயந்து இவரே வீட்டிலிருந்த தலைவலி, காய்ச்சல் மாத்திரைகளை எடுத்து போட்டுள்ளார்.
ஆனால் தொடர்ந்து அவர் மயக்கம் ஏற்பட்டு வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு அவரது பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் டாக்டர்களுக்கு என்ன நடந்தது ஏன் இப்படி மயங்க நிலையில் இருக்கிறார் என தெரியவில்லை.
இறுதியாக அவர் மயக்கத்திலேயே தான் எலி மருந்தை வைத்து பல் தேய்த்ததை சொன்ன நிலையில் டாக்டர்கள் அவரை வேறு மருத்துவமனைக்கு கூட்டி சென்றுள்ளனர்.
ஆனால் டாக்டர்கள் எவ்வளவோ சிகிச்சை அளித்து ஆஃப்சனாவை காப்பாற்ற முடியவில்லை.
பேஸ்ட் என நினைத்து எலி மருந்தை எடுத்து பல் தேய்க்க முயன்றவர் யாரும் எதிர்பாராத விதமாக மரணமடைந்தது பெரும் வைரலாக பரவி வருகிறது.