தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 72 ஆயிரம் பேர் இதுவரை சிக்கினர்.
நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டதிவிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் நேற்று 646 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 18 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதற்கமைய இதுவரை தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 72 ஆயிரத்து 113 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இன்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.
இதேவேளை, மேல் மாகாணத்தில் உள்நுழையும் மற்றும் வெளியேறும் 13 பிரதேசங்களில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறி 303 வாகனங்களில் வந்த 198 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
114 பொலிஸார் அதிகாரிகள், 73 இராணுவத்தினர் ஆகியோர் இணைந்து இந்தச் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன் மேல் மாகாணத்தில் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை 283 பொலிஸ் அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது அனுமதிப்பத்திரமின்றி 735 வாகனங்களில் பயணித்த 1,130 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்” – என்றார்.