சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைய மாமரக்கன்றுகள் வழங்கி வைப்பு.
சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைய கந்தளாய் ரஜ எல பிரதேசத்தில் 3000 மாமரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு நேற்று திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமாகிய கபில நுவன் அத்துக்கோரல தலைமையில் நடைபெற்றது.
டோம் ஜேசி இனத்தைச் சேர்ந்த மாமரக் கன்றுகள் வழங்கப்பட்டதுடன் சிறப்பான முறையில் இவற்றை பராமரிப்பதன் மூலம் 3 வருட காலத்துக்குள் அறுவடையை பெற்றுக்கொள்ள முடியும். இதன் மூலம் அதிகமான வருமானத்தை ஏனைய தொழில்களுக்கு புறம்பாக பெற்றுக்கொள்ளக்கூடிய நிலவரம் ஏற்படும்.
நாட்டில் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில் இவ்வாறான பல திட்டங்கள் திருகோணமலை மாவட்டத்திலும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பிரதேச அரசியல் தலைமைகள் பயனாளிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.