லொஹான் ரத்வத்த ராஜினாமா

வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்களுக்கு பொறுப்பேற்று இராஜாங்க அமைச்சர் கொலான் ரத்வத்த அவரது பதவியை ராஜினாமா செய்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவை உடனடியாக பதவி விலகுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளதாக இத்தாலியில் உள்ள பிரதமரது தரப்பு தெரிவித்திருந்தது.
இத்தாலிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, லொஹான் ரத்வத்தவை தொலைபேசியூடாக தொடர்புக் கொண்டு இந்த பணிப்புரையை விடுத்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.