அதிகரிக்கப்படுமா எரிவாயு விலை?
லிட்ரோ – லாஃப் மற்றும் புதிய நிறுவனத்துடன் இணைந்து எரிவாயு விலையை அதிகரிக்க பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.
உள்நாட்டு சந்தைகளில் எரிவாயு விலையை அதிகரிக்குமாறு குறித்த நிறுவனங்கள் அரசாங்கத்திடம் அனுமதி கோரியுள்ளன. லாஃப் எரிவாயு நிறுவனம் அண்மையில் விலை உயர்த்தியபோதும் இன்னமும் நட்டத்தில் செல்வதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தற்போது லிட்ரோ எரிவாயு நிறுவனம் நஷ்டத்தில் வியாபாரத்தை முன் னெடுத்துச் செல்கிறது. உலக சந்தையில் எரிவாயு விலை உயர்ந்துள்ளமையால் எரிவாயு விலையை அதிகரிக்குமாறு அந்த நிறுவனம் அரசாங்கத்திற்கு யோசனை ஒன்றை முன் வைத்துள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
எனினும் இது தொடர்பாக இன்னமும் கலந்துரையாடல் மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். லிட்ரோவின் எதிர்காலம் முற்றிலும் ஆபத்தில் உள்ளதாகவும் அவர்கள் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.