கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது – ஹன்னா சிங்கர்
இலங்கையின் ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹன்னா சிங்கர், கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை என்று தெரிவித்துள்ளார்.
இதை அவர் ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
நெல்சன் மண்டேலா விதிகள் மற்றும் விதிமுறைகளின்படி கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பது அரசின் கடமை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ள அவர் , “சிறைச்சாலை சீர்திருத்தம் மற்றும் போதை மறுவாழ்வு குறித்த எங்கள் பணியில், இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகம் அனைத்து கைதிகளின் உரிமைகளையும் பாதுகாக்கும் திறனை வலுப்படுத்துவதோடு, கைதிகளை தவறாக நடத்துவதை கண்டிக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.