மத்திய கிழக்குக்கு செல்லும் இந்தியர்கள், சுற்றுலா பயணிகள் போல இலங்கைக்குள் வருகிறார்கள்
சுற்றுலாப் பயணிகளை அழைத்து வர வேண்டும் என்றால், அவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் வரை அவர்கள் சுகாதார மற்றும் பாதுகாப்பு சேவைகளால் நெருக்கமாக கண்காணிக்கப்பட வேண்டும். ஆனால் அது அப்படி நடப்பதில்லை என இலங்கை பொது ஆய்வாளர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார் .
விமான நிலையம் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்பட்ட பின்னர், கடந்த சில நாட்களாக ஏராளமான இந்தியர்கள் சுற்றுலா பயணிகளாக வந்து கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. அப்படி வருவோர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பின்னர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இங்கிருந்து செல்வதை காண முடிவதாகவும் , “நாட்டில் இந்திய சுற்றுலாப் பயணிகளை, குறிப்பாக சுகாதாரத் துறையில் யார் தனிமைப்படுத்துகிறார்கள் என்ற கேள்வியை நாங்கள் எதிர்கொள்கிறோம். அது குறித்து எவரும் எமக்கு அறியத் தருவதில்லை” என்று அவர் தெரவித்துள்ளார்.
சுற்றுலாப் பயணிகள் வந்திறங்கியதும், அவர்களது முகவர்களால் நேரடியாக அழைத்துச் செல்லப்படுகிறார்கள், அவர்கள் எத்தனை நாட்கள் அங்கு தங்குகிறார்கள் என்பது சுகாதாரத் துறைக்குத் தெரியாது என்றும் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.