அனுராதபுரம் சிறைச்சாலை சிசிடிவி காட்சிகளை நீக்க முயற்சி

அனுராதபுரம் சிறைச்சாலையின் சிசிடிவி காட்சிகளை நீக்க பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக கைதிகளின் உரிமைகள் பாதுகாப்பு குழு தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் சேனக பெரேரா ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்தார்.
குடிபோதையில் ஒரு அமைச்சர் சிறைக்குள் நுழைந்து கைதிகளை சித்திரவதை செய்தபோது, சிறை அதிகாரிகள் தங்கள் பொறுப்புகளை புறக்கணித்ததாகவும், அவர்கள் அமைச்சரின் நடத்தைக்கு நிறைய இடம் கொடுத்ததாகவும் அவர் கூறினார்.
இந்த சம்பவத்தை விசாரிக்க ஒரு சுயாதீன குழு நியமிக்கப்பட வேண்டும் என்றும், துப்பாக்கியுடன் சிறைக்குள் நுழைந்த அமைச்சரை கைது செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.