குழந்தை புரைக்கேறியதில் பரிதாப மரணம்! – பரிசோதனையில் கொரோனாத் தொற்று.

யாழ்., பருத்தித்துறை ஆதார மருத்துவமனை வெளிநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்ட 15 மாதங்கள் நிரம்பிய பெண் குழந்தை உயிரிழந்த நிலையில் கொரோனாத் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உடுப்பிட்டியைச் சேர்ந்த ஒரு வயதும் 3 மாதங்களும் நிரம்பிய குழந்தை புரைக்கேறிய நிலையில் நேற்று பருத்தித்துறை ஆதார மருத்துவமனை வெளிநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தது.
குழந்தையின் சடலத்தில் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனாத் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.