ஆந்திராவில் வாஷிங் மெஷினில் படம் எடுத்து ஆடிய பாம்பு..!

ஆந்திராவில் வாஷிங் மெஷினில் நல்ல பாம்பு படமெடுத்த சம்பவம் நடந்துள்ளது.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீநிவாஸ். இவர் தனது வீட்டில் உள்ள வாஷிங்மெஷினில் துணிகளை துவைப்பதற்காக சென்றுள்ளார். வாஷின் மெஷினில் இருந்து எதோ சத்தம் கேட்டுள்ளது. அவர் வாஷிங் மெஷினை திறந்ததுதான் தாமதம் உள்ளே பதுங்கியிருந்த நல்லபாம்பு திடீரென படமெடுத்து ஆடியது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஸ்ரீநிவாஸ் பயத்தில் கூச்சலிட்டுள்ளார்.
ஸ்ரீநிவாஸ் அலறல் சத்தம் கேட்டு வந்த குடும்பத்தினர் பாம்பை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து பாம்பு பிடிக்கும் நபருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த பாம்பு மீண்டும் வாஷிங் மெஷினுக்குள் சென்று பதுங்கியது. பாம்பு குறித்த கேள்விப்பட்ட அக்கம்பக்கத்தினர் பார்வையிட வந்துவிட்டனர். வாஷிங்மெஷினில் இருந்து படம் எடுத்து பயம் காட்டியது.
ஒருவழியாக பாம்பு பிடிக்கும் நபர் வந்து சேர்ந்தார். வாஷிங் மெஷினை அவர் திறந்ததும் பாம்பு படம் எடுத்தது. அதனை அங்கிருந்த மக்கள் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர்.பாம்புகளை பிடிக்கும் வர்மா அந்த நல்ல பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட்டார். இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.