இலங்கைக்கும் சுவிட்சர்லாந்துக்கு இடையிலான நேரடி விமான சேவை மீண்டும்…

இலங்கைக்கும் சுவிட்சர்லாந்துக்கு இடையிலான நேரடி விமான சேவை மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. இந்த விமான சேவையை Swiss International விமான சேவை நிறுவனம் மீண்டும் மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் 4ஆம் திகதி முதல் இந்த சேவை மீண்டும் அமலுக்கு வரவிருக்கிறது. கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வாரத்தின் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் சுவிட்சர்லாந்தின் Zurich நகருக்கு விமான சேவைகள் மேற்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.