சமூக ஒற்றுமையும் சகவாழ்வும் இந்நாட்டிற்கு மிகப் பிரதான அம்சமாகும்.
சமூக ஒற்றுமையும் சகவாழ்வும் இந்நாட்டிற்கு மிகப் பிரதான அம்சமாக அமைந்துள்ளது. இதில் அனைத்து மக்களும் மன நிறைவுடன் கவனம் செலுத்த வேண்டி இருக்கிறது.
வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இஸ்லாமிய சன்மார்க்கத்தின் பணியாகும். இதுவே காலத்தின் தேவையாகும் என்று அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையின் தலைவர் மௌலவி ரிஸ்மி முப்தி தெரிவித்தார்.
கண்டி அல் புர்க்கானிய்யா அரபுக் கல்லூரியின் பணிப்பாளர் மௌலவி எச் . உமர்தீன் அவர்களின் தமிழ் சிங்கள மொழிகளில் எழுதிய ஆறு கை நூல்களின் வெளியிட்டு விழா சூம் மற்றும் முகப்புத்தக சமூகவலைத்தளம் ஊடாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் சூம் சமூக வலயத்தளம் ஊடாக பிரதம அதிதியாக கலந்து கொண்ட அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையின் தலைவர் மௌலவி ரிஸ்மி முப்தி இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் எழுதிய மஸ்ஜித்கள்; ஊடாக சமூகத்தை வலுவூட்டுவோம் என்ற இரு நூல்களும், தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் எழுதிய மாநபியின் மருத்துவ வழிகாட்டல் என்ற இரு நூல்களும், பிறமதத்தவர்களை மதித்து வாழ வழிகாட்டும் மார்க்கம் இஸ்லாம் என்ற நூலும், அருள்மிகு ரமழானும் அதன் சட்ட திட்டங்களும் என்ற பெயர்களில் எழுதிய ஆறு நூல்களின் வெளியிட்டு விழா கண்டி கட்டுக்கலை அல் புர்கானிய்யா அரபுக் கல்லூரியின் நூலகத்தில் இடம்பெற்றது.
எச். உமர்தீன்ரஹ்மான் என்ற முகப்புத்தகத்தின் ஊடாகவும் சூம் ஊடாகவும் இடம்பெற்ற இந்நிகழ்வில் நூல்களின் முதல் பிரதியை அகில இலங்கை பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் பிரதித் தலைவரும் கண்டி கொரோனா தொற்றுச் செயலணியின் தலைவருமான கே. ஆர். ஏ. சித்தீக் நூல்களின் முதல் பிரதிதியைப் பெற்றுக் கொண்டார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்
நாங்கள் இந்த நாட்டில் பெரும்பான்மையின சமூகத்தோhடு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அவர்கள் அனைத்து மக்களும் நல்லவர்களே. ஆனால் குறிப்பிட்ட சில வெளிசக்திகள், சூத்திரதாரிகளால் நாம் 2012 ஆம் ஆண்டு முதல் நாம் பலத்த சோதனைகளை நாம் இந்நாட்டில் அனுபவித்து வருகின்றோம். இதை அல்லாஹ் தஆலா எம்மைப் பாதுகாக்க வேண்டும். நாம் எல்லோரும் மிக நிதானமாகவும் தூர நோக்கோடு மிக அமைதியாக எமது பயணத்தை மேற்கொள்வோம் என்று அவர் தெரிவித்தார்.
அக்குறணை ரஹ்மானியா அரபுக் கல்லூரியின் விரிவுரையாளராக நான் இருந்துள்ளேன். அந்த வகையில் 1987 களில் மௌலவி எச் உமர்தீன் அவர்கள் அங்கு கற்று பட்டம் பெற்று வெளியாகக் கூடிய அந்தக் காலம் முதல் இன்று வரையிலும் அவருடைய நண்பனாக இருந்துள்ளேன் இரவு பகலாக மார்க்கப் பணிகளில் அவருடன் சேர்ந்து பயணிக்கக் கூடிய சந்தர்ப்பத்தை அல்லாஹ் தந்திருக்கின்றான்.
அக்குறணை அரபுக் கல்லூரியின் அதிபராக மௌலவி ஜிப்ரி அவர்கள் இருந்தார்கள். அப்பொழுது அரபுக் கல்லூரியில் சேர்ந்து பயணிக்கக் கூடிய மௌலவி நயீம், மறைந்த மௌலவி சூபி போன்ற பலர் ரஹ்மானியாவுடைய விரிவிவுரையாளராக கடமையாற்றினார்கள். மௌலவி உமர்தீன் அவர்கள் தன்னுடைய மார்க்கக் கல்வியையும் எழுத்தாற்றலையும் இந்த உலமாக்களின் சூழலிலும் அவர்களுடைய வழிகாட்டலுடனேயே அதனைப் பெற்றுக் கொண்டார்,
உமர்தீன் அவர்கள் எழுதிய கை நூல்கள் எல்லாம் அவரது வாழ்க்கையோடு சம்மந்;தப்படக் கூடிய புத்தகங்களாக அமைந்துள்ளன. அவர் தமது துறை சார்ந்த மார்க்கக் கல்வி விடயங்களையும் ,அவர் வாழ்ந்த சூழலின் சமூகப் போக்குகள் மற்றும் சமூக கற்றுக் கொள்ள வேண்டிய பல்வேறுவிதமான விடயங்களை கருப்பொருளாக கொண்டு சிறு சிறு கை நூல்களாக வெளிக்கொணர்ந்துள்ளார்,
சமய, சமூக நல மேம்பாட்டுக்காக ஒரு நல்ல மனிதனாகவும் ஒரு முன்மாதரிக்கமிக்கவராக இருந்து பல பங்களிப்பைச் செய்துள்ளார். அதற்காக பல தியாகங்களையும் சிரமங்களையும் மேற்கொண்டு இருக்கிறார். இக்கெட்டான கட்டங்களில் கூட அவர் பட்ட துயரங்களையும் அனுபவங்களையும் தான் எழுதிய புத்தகத்தின் வாயிலாக வெளிக்கொணர்ந்துள்ளார். இந்நூல் வெறுமனே எழுத்து மாத்திரமல்ல தன்னுடைய வாழ்க்கை அனுபவத்தையும் முன் வைக்கக் கூடிய ஒரு சிறந்த கைநூல்களாக இந் நூல்கள் காணப்படுகின்றன.
தற்கால தேவையினை கருத்திற் கொண்டு எழுதப்பட்ட நூலாகும். இதுவே சிறப்பம்சமாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
(இக்பால் அலி)