வவுனியாவில் மேலும் 3 பேர் கொரோனாவால் மரணம்!

வவுனியா மாவட்டத்தில் கொரோனாத் தொற்றால் மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கொரோனாத் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த, தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டிருந்த மற்றும் தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் இருந்தோர் என 03 பேர் தொற்றால் மரணமடைந்துள்ளனர்.
தாண்டிக்குளம், வவுனியா நகர், பம்பைமடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே தொற்றால் மரணித்தவர்களாவர்.
இந்நிலையில், மரணித்த 3 பேரினதும் உடல்களையும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தகனம் செய்ய சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.