தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 816 பேர் சிக்கினர்!
நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 816 கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 77 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதற்கமைய இதுவரை கைதுசெய்யப்பட்டோரின் எண்ணிக்கை 73 ஆயிரத்து 894ஆக உயர்வடைந்துள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் மற்றும் உள்நுழையும் 13 இடங்களில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறி நேற்று 263 வாகனங்களில் பயணித்த 142 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
அத்துடன் மேல் மாகாணத்தில் நேற்றுக் காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை 285 பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது அனுமதிப்பத்திரமின்றி 865 வாகனங்களில் பயணித்த 1,438 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.