ரிஷப் பண்ட் அணியின் தலைவராக தொடர்வார்.
டெல்லி அணியை கடந்த 2 வருடங்களாக சிறப்பான முறையில் வழிநடத்தி வந்தவர் ஸ்ரேயாஸ் ஐயர். கடந்த மார்ச் 23ம் தேதி நடைபெற்ற இங்கிலாந்துடனான முதல் ஒருநாள் போட்டியில் இடதுகையில் பலத்த காயம் ஏற்பட்டது.
தோள்பட்டை எலும்பு இடம் மாறியுள்ளதால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யவேண்டியிருந்தது. இதன் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். ஏனென்றால் காயம் சரியாக 3 – 4 மாதங்கள் ஆகும் என்று அப்போது கூறப்பட்டது
ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தால் பாதிக்கப்பட்டதால், டெல்லி அணியின் புதிய கேப்டனாக இளம் வீரர் ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டார். அணியில் அஸ்வின், ஸ்மித் என பல அனுபவ வீரர்கள் உள்ள போதும் ரிஷப் பண்ட்-க்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இளம் வீரர் என்றாலும், சென்னை அணிக்கு எதிரான முதல் போட்டியிலேயே வெற்றி பெற்றுக்கொடுத்து அசத்தினார். இவரின் கேப்டன்சியை பார்த்த கிரிக்கெட் வல்லுநர்கள், இந்திய அணியை வழிநடத்தவே தகுதியுள்ளது எனக்கூறினர்.
ஆனால் தற்போது ஸ்ரேயாஸ் ஐயர் பூரண குணமடைந்து முழு உடற்தகுதியுடன் உள்ளார். இதற்காக தேசிய அகாடமியில் இருந்து சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் தொடரின் 2 வது பாதியில் ஸ்ரேயாஸ் ஐயர் டெல்லி அணிக்கு திரும்பியுள்ளார் மீண்டும் கேப்டன் பதவி அவரிடமே கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது
இந்நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்வாகத்தில் இருந்து நேற்று புதிய தகவல் வெளிவந்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 2வது பாதியிலும் ரிஷப் பண்ட் தான் கேப்டனாக தொடர்வார் என்று டெல்லி அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.