சேரிக்கு போய் பிச்சை பாத்திரம் ஏந்தும் குபேரர்கள் : உபுல் ஜோசப் பெர்னாண்டோ
வங்காளதேசத்தில் நடந்த தெற்காசியா குறித்த சார்க் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச டிசம்பர் 21, 1991 அன்று டாக்காவில் இறங்கியபோது வங்காளதேசம் ஒரு ஏழை நாடாக இருந்தது.
அந்த நேரத்தில் பங்களாதேஷ் , இலங்கையை தெற்காசியாவில் ஒரு சக்திவாய்ந்த நாடாகப் பார்த்தது.
அப்போதைய பங்களாதேஷ் பிரதமர் பேகம் கலீதா ஷியா தனது இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது பிரேமதாசாவின் 200 ஆடைத் தொழில்களை நிறுவும் திட்டம் குறித்து அறிந்து கொள்வதில் கவனம் செலுத்தினார்.
பிரேமதாசவின் கார்மென்ட் இண்டஸ்ட்ரீஸ் 200 திட்டத்தின் ஒரே நோக்கம் ஐரோப்பாவிற்கு ஆடைகளை ஏற்றுமதி செய்வதில் இலங்கையை முதலிடம் பெற வைப்பதாகும்.
ஜேஆரின், அரசாங்கத்தின் பிரதமராக பிரேமதாச இருந்தபோது தொடங்கிய சுதந்திர வர்த்தக வலய கருத்தின் மிக வெற்றிகரமான திட்டம் ஆடைத் தொழில் என்பதை பிரேமதாச உணர்ந்தார்.
சுதந்திர வர்த்தக மண்டலம் பற்றிய ஜேஆரின் கருத்து நகரத்தை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டது. மேல் மாகாணத்தில் சுதந்திர வர்த்தக மண்டலங்கள் நிறுவப்பட்டன. கிராமங்களில் இருந்து சுதந்திர வர்த்தக வலயங்களுக்கு வரும் இளைஞர்களின் நிலையை புரிந்த பிரேமதாச, இந்த மண்டலங்களை கிராமங்களுக்கு கொண்டு செல்ல விரும்பினார்.
அந்த தொழிற்சாலைகளில் பணிபுரியும் இளைஞர்களுக்கு போர்டிங் கட்டணம், உணவுச் செலவுகள் ஆகியவற்றில் எந்தப் பிரச்சினையும் இருக்காது என்பதை அவர் உணர்ந்தார். தொலைதூர கிராமத்திற்கு ஒரு தொழிற்சாலை வரும்போது, ஒரு கிராமம் செழிக்கும் என்பது அவருக்குத் தெரியும்.
அவர் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கடிகார கோபுரத்தை கட்டினார், அங்கு அவர் கம்பத்தை சுற்றி ஒரு சிறிய நகரத்தை உருவாக்க ஒரு ஆடை தொழிற்சாலையை கட்டினார். பின்னர் கடைகள் மற்றும் பேருந்து நிறுத்தங்கள் தானாகவே தோன்றும். பிரேமதாசாவைப் போலவே, அவர் கிராமங்களைத் தேடி, இந்த இலக்குகளை அடைய ஆடைத் தொழிற்சாலைகளைத் ஆரம்பித்தார்.
கிராமங்களில் தொழிற்சாலைகள் அமைப்பது கடினம் என சில ஆடை வியாபாரிகள் சொன்னாலும், முதலீட்டு வாரியம் மூலம் பிரேமதாச, தொழில் தொடங்கியவர்களுக்கு வசதிகளை செய்து கொடுத்தார். அதுவே கிராமங்களில் உள்ளோருக்கு தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கும் ஒரு வேலைத் திட்டமாக செயல் வடிவமானது.
இந்த ஆடைத் தொழில் திட்டத்தை கொண்டு வந்த பிரேமதாச வாழ்ந்திருந்தால், இன்று ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்கு ஆடைகளை ஏற்றுமதி செய்யும் முதல் நாடாக இலங்கை இருந்திருக்கும்.
அப்படியானால், இலங்கை இன்று தெற்காசியாவின் பணக்கார நாடாக மாறியும் இருக்கும். இதை அப்போதைய எதிர்க்கட்சியான SLFP இதை புரிந்து கொள்ளவில்லை. பிரேமதாசாவின் 200 ஆடைத் தொழிற்சாலைகள் திட்டத்தைப் பார்த்து அவர்கள் ஏளனம் செய்தனர்.
அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் திருமதி பண்டாரநாயக்க, பிரேமதாசவின் ஆடைத் தொழிற்சாலைத் திட்டத்தை கேலி செய்தார், பிரேமதாச இலங்கையில் உள்ள பெண்கள் மற்றும் சிறுவர்களைத் கொண்டு வெள்ளையர்களுக்கு உள்ளாடை (லங்கட்) தைத்துக் கொடுக்கிறார் என நையாண்டி செய்தார்.
பிரேமதாச , இலங்கையின் எதிர்கால தலைமுறையை அறிவற்ற ஆடை தைக்கும் தலைமுறையாக மாற்றப் போகிறார் என பிரேமதாச மீது அவர்கள் குற்றம் சாட்டினர். பிரேமதாசவை முடிவுக்குக் கொண்டுவர எதிர்க்கட்சிகள் அவதூறு தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தனர். இக்காலத்தில்தான் பிரேமதாச விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டார். பிரேமதாசாவின் ஆடைத் தொழில் திட்டம் அத்தோடு தொய்வு நிலையானது.
வங்கதேசம் இலங்கையின் மீது ஒரு கண் வைத்துக் கொண்டிருந்தது. பிரேமதாசாவின் ஆடைத் தொழில் திட்டத்தை அவர்கள் நகலெடுத்தனர். அதனால் இலகுவில் பங்களாதேசால் , ஐரோப்பிய ஆடை முதலீட்டாளர்களை பங்களாதேஷுக்குள் ஈர்க்க முடிந்தது,
2002 யூ.என்.பி. அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், பிரேமதாசாவின் ஆடைத் தொழில் திட்ட வேலைகள் மீண்டும் தொடங்கின.
பிரேமதாச 200 ஆடைத் தொழில்சாலைகளை உருவாக்கிய போது , ஐரோப்பாவிலிருந்து கிடைக்கும் GSP நிவாரணம் இலங்கைக்கு கிடைக்கவில்லை.
2002 யூ.என்.பி. அரசாங்கம் இந்த ஜிஎஸ்பி சலுகை பெற முயன்றபோது, அப்போதைய எதிர்க்கட்சியான சந்திரிகாவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (UPFA) , ஐக்கிய தேசியக் கட்சி இலங்கையை ஐரோப்பாவிற்கு விற்கப் போவதாகக் பரப்புரை செய்தது.
2004 யூ.என்.பி.யை தோற்கடித்து சந்திரிகா தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி (UPFA) அரசாங்கத்தை உருவாக்கினார்.
அதன்போது இலங்கையை விற்கப் போவதாக கூறிய அதே சந்திரிகா அரசு , யூஎன்பீ பெற்றுக் கொடுத்த அதே ஜிஎஸ்பி சலுகையை பாவித்து நிவாரணத்தை பெற்றுக் கொண்டது.
2005 மஹிந்த ஜனாதிபதியானார். அவரது காலத்திலும், ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை இலங்கையில் செயலில் இருந்தது. ஆனால் அவரது அரசாங்கம் ஊடக சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை மதியாமையால் , 2010 ல் ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை , பறிக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்தது.
நிவாரணம் வழங்கப்பட வேண்டுமானால் ஊடக சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் உறுதி செய்யப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் கூறும்போது, மகிந்தவின் அரசு, ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை பயனற்றது என்றும், ஜனநாயகம் மற்றும் ஊடக சுதந்திரத்தை நசுக்கி அரசு பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் நினைத்தனர்.
2010ல் ஜிஎஸ்பி சலுகையை இலங்கையிடமிருந்து ஐரோப்பா பறித்துக் கொண்ட போது , வங்கதேசம் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தனதாக்கிக் கொண்டது.
பிராண்டிக்ஸ் மற்றும் ஹைட்ராமணி போன்ற இலங்கையின் முன்னணி ஆடை வணிகர்கள் பங்களாதேஷில் தங்களது தொழிற்சாலைகளை ஆரம்பித்து , GSP + சலுகையை பெற்றுக் கொண்டனர்.
வங்காளதேசம் ஆடைத் தொழிலுக்காக ஜிஎஸ்பி பிளஸ் சலுகையைப் பெறத் தொடங்கியதனால் இன்று, பங்களாதேஷ் ஐரோப்பாவிற்கு ஆடை ஏற்றுமதி செய்யும் முதல் மூன்று நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது.
1990 களில் ரணசிங்க பிரேமதாச கண்ட கனவு இது. இலங்கையின் எதிர்க்கட்சிகளும் , இலங்கை ஊடக பரப்புரைகளும் பிரேமதாசவின் கனவை தகர்த்தன.
வங்கதேசம் அந்தக் கனவைத் திருடியது. இன்று, வங்கதேசம் அந்தக் கனவை தனக்கு சாதகமாக பாவித்து நனவாக்கி வெற்றி பெற்றுள்ளது.
‘பங்களாதேஷ் , ஆடைத் தொழில், ஐரோப்பாவின் ஜி.எஸ்.பி. பிளஸ் ஆகியவற்றால் பொருதார உச்சத்தை அடைந்துள்ளது ‘
உலகப் புகழ்பெற்ற பேராசிரியர் பிரபீர் டுட்டா ‘தி பிரிண்ட்’ ஒ சஞ்சிகைக்கு சொன்ன கதை இது ,.
டிசம்பர் 1991 இல், ரணசிங்க பிரேமதாச தெற்காசிய வல்லரசாக பங்களாதேஷில் இறங்கினார். அண்மையில், மகிந்த ராஜபக்ச வங்காள தேசத்திற்கு ஒரு பிச்சைக்காரனைப் போல பிச்சை பாத்திரத்துமன் கடன் கேட்டு வந்திறங்கிளார்.
இலங்கைக்கு வங்காள தேசம் கடன் கொடுப்பதிலிருந்து , தெற்காசியாவில் ஒரு வல்லரசாக வங்காளதேசம் மாறியுள்ளதாகவும் , வறுமையில் விழுந்து, தெற்காசியாவில் டாலர்கள் இல்லாமல் உழலும் இலங்கைக்கு ஆக்ஸிஜனை வழங்கி உயிர்ப்பிக்க அது உதவுவதாகவும் உலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
தெற்காசியாவில் பங்களா தேச அரச எழுச்சி, இலங்கைக்கு வங்கதேசத்தின் கடன் என்று உலக ஊடகங்கள் எழுதின.
1977ல் உலகம் முழுவதற்கும் பொருளாதாரத்தை திறந்த இலங்கை தெற்காசியாவில் பணக்கார நாடாக மாறிய முதல் ஆசிய நாடாக மாறத் தொடங்ய போது , இலங்கை எப்படி பேரழிவை சந்தித்து , அழிக்கப்பட்டது. அதேநேரம் பங்களாதேஷ் எப்படி எழுந்தது. அந்த நேரத்தில் இலங்கை சொர்க்கமாக அறியப்பட்டது, பங்களாதேஷ் ஒரு சேரி நாடு அல்லது ஒரு சாண்டி நாடு (மணல் பூமி) என்று அழைக்கப்பட்டது.
இன்று, சொர்க்கத்தின் அரச வாரிசுகள் பிச்சைக் கிண்ணத்தை எடுத்துக் கொண்டு, சேரிகளுக்கு போய் பிச்சை எடுக்கும்போது, அது கடன் அல்ல, பணப் பரிமாற்றம் என சொல்கிறார்கள்.
சமூக ஊடகங்கள் இதற்காக ஒரு அருமையான காணொளியைப் பகிர்ந்துள்ளன.
கொரோனாவின் ஆரம்ப நாட்களில் ஒரு போலீஸ்காரரிடம் , கள்ளச் சாரரயக்காரர் ஒருவர் அகப்பட்டுக் கொள்வது அந்த வீடியோவில் காட்டப்படுகிறது.
‘நான் விற்கவில்லை’ என்கிறார் கள்ள சாரயம் விற்பவர்.
‘நீ போத்தல்களை தயாரித்து யாருக்காவது கொடுத்தாயா?’ என்று போலீஸ்காரர் கேட்கிறார்.
‘ஆம்.’ என்கிறார் கள்ள சாரயம் விற்பவர்.
‘நீ பணம் வாங்கினாயா?’ என போலீஸ்காரர் மீண்டும் கேட்கிறார்.
“ஆம்” என கள்ள சாரயம் விற்பவர் பதிலளித்தார்.
‘அதனால்தான் பேயா விற்றாய் என சொல்கிறேன்’
என சாரயம் விற்பவரை உதைத்துக் கொண்டே போலீஸ்காரர் சொல்கிறார்
அந்த வீடியோவுக்கு கீழ் உப தலைப்பு பின்வருமாறு போகிறது:
பின்னர் தருவதாக கைமாற்றுக்கு வாங்குவதைத்தான் பேயா, கடன் என்பது.
சுவையான கதை அது அல்ல இதுதான்…..
முஸ்லீம் கொத்து மற்றும் ரொட்டி கடைகளை நிராகரித்த அதே சிங்கள அரசு, முஸ்லிம் பங்களாதேசிகளிடம் கடன் கேட்டு பிச்சை எடுப்பதுதான் இன்றைய அவல நிலை.
உபுல் ஜோசப் பெர்னாண்டோ
(උපුල් ජෝශප් ප්රනාන්දුගේ ගුරුදා විග්රහය)
தமிழில் : ஜீவன்