சட்ட விரோதமாக வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடும் வர்த்தகர்கள் மீது வழக்கு.

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரின் கட்டளைக்கமைவாகவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் வட மாகாண உதவிப்பணிப்பாளரின் வழிகாட்டலுக்கமைவாகவும், பாவனையாளர் அலுவல்கள் அதகாரசபையின் உத்தியோகத்தர்களால் கோப்பாய், இமையாணன்,கரவெட்டி, கரணவாய் ஆகிய பிரதேசங்களில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு கிடைக்கப்பெற்ற வர்த்தக நடவடிக்கை ( சீனி,அரிசி, எரிவாயு) தொடர்பான முறைப்பாடுகள் விசாரணை செய்யப்பட்டதுடன் சட்ட விரோதமான செயலி்ல் ஈடுபடும் வர்த்தகர்கள் மீது வழக்கு தாக்கலும் செய்யப்பட்டது.