நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க பதவி விலக தீர்மானம்?
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க பதவி விலகவுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெளிநாடுகளுக்கான இலங்கைத் தூதுவர்கள் தொடர்ச்சியாக பதவி விலகி வரும் நிலையில், மியன்மாருக்கான இலங்கைத் தூதுவராகப் பதவி வகித்த பேராசிரியர் நளிந்த டி சில்வா மற்றும் அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதவராக பதவி கவித்த ரவிநாத் ஆரியசிங்க ஆகியோர் கடந்த நாட்களில் பதவி விலகியிருந்தனர்.
இதனால் வெற்றிடமாகவுள்ள – அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோவிற்கான தூதுவராக மஹிந்த சமரசிங்க பொறுப்பேற்கவுள்ளதாகவும், அதன் காரணமாகவே அவர் தனது பதவியை இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.