இத்தாவில் பகுதியில் இடம்பெற்ற கோரவிபத்து.

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில் யாழ்நோக்கி பணியாளர்களை ஏற்றி வந்த சிறிய ரக விசேட சேவை பேரூந்துடன் கிளிநொச்சி நோக்கி சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டி வேக கட்டுப்பாட்டை இழந்து பேரூந்துடன் மோதியதில் முச்சக்கர வண்டி முற்றாக சேதமடைந்துள்ளது.
மேலும் முச்சக்கர வண்டி சாரதி பலத்த காயங்களுக்குள்ளானதுடன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
இந்நிலையில் மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.