மாணவர்களுக்கு வரலாற்றை நினைவூட்ட பள்ளிகள் இருக்க வேண்டியது அவசியம்
மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் திராவிட வரலாற்றை அறியும் வகையில் வரும் ஆண்டு முதல் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் திராவிட பள்ளிகள் இருக்க வேண்டியது அவசியம் என உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் திராவிட பள்ளியில் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திராவிட பள்ளியில் பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வெற்றிச் சான்றிதழ்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திராவிட பள்ளியின் நிறுவனர் சுப.வீரபாண்டியன், திராவிடப்பள்ளி தலைமை ஒருங்கிணைப்பாளர்
பொள்ளாச்சி.மா.உமாபதி, முன்னாள் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் ம.ராஜேந்ரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மேடையில் பேசியதாவது, திராவிட பள்ளியை துவக்கி வைத்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதனை மேலும் மெருகூட்டும் வகையில் தந்தை பெரியாரின் பிறந்தநாளை சமூகநீதி நாள் என்று முதல்வர் அறிவித்திருக்கிறார். மாணவர்களுக்கு வரலாற்றை நினைவூட்ட திராவிட பள்ளிகள் தேவைப்படுகின்றன. கொள்கை பிடிப்பில் ஊரிப்போனவரே தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கிறார். இன்றைய வளர்கிற இளைஞர்களுக்கு திராவிடத்தின் வரலாற்றை பற்றி எடுத்துக்கூற திராவிடப்பள்ளி கட்டாயம்.
ஜாதிய கொடுமைகள், ஏற்றத்தாழ்வுகள் இருக்ககுடாது என்ற உணர்வோடு உருவானதே திராவிட இயக்கம். வரும் ஆண்டு முதல் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் திராவிட பள்ளிகள் இருக்க வேண்டியது அவசியம். வரலாற்றை தெரிந்திகொள்வதன் மூலமாக எதிர்காலத்தை எப்படி உருவாக்க வேண்டும் என்பதை மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் திராவிட பள்ளிகள் காற்று தருகிறது.
சமத்துவ மற்றும் சமூகநீதியின் உணர்வை எப்படி உருவாக்கினோம் என்பதை திராவிட பள்ளிகள் தெளிவுபடுத்துகிறது. இளைஞர்கள் மத்தியில் விதைக்கப்பட வேண்டிய விதை என்று தெரிவித்தார்.