1 முதல் 7ம் வகுப்பு வரையிலான பள்ளிகளை நவம்பர் மாதம் மீண்டும் ஆரம்பிக்க கேரள அரசு முடிவு!

1 முதல் 7ம் வகுப்பு வரையிலான பள்ளிகளை நவம்பர் மாதம் திறக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. கேரளாவில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. பள்ளிகளை திறப்பது குறித்து முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் உயர்மட்ட கொரோனா ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வு கூட்டத்தின் முடிவில் 1 முதல் 7-ம் வகுப்பு வரையிலான வகுப்புகள், 10 மற்றும் 12-ம் வகுப்புகளை நவம்பர் 1-ம் தேதி திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மற்ற வகுப்புகளை நவம்பர் 15-ம் தேதி திறக்கலாம் என்று முடிவு செய்துள்ளனர்.

அடுத்த வருடம் பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களை கருத்தில் கொண்டு பள்ளிகளை திறக்க முடிவு செய்துள்ளனர். மருத்துவ நிபுணர்களும் முதல்வரின் ஆலோசனை கூட்டத்தில் பள்ளிகளை திறந்த உடன் மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

பள்ளிகளை திறப்பதற்கான நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மற்றும் பள்ளிக்கல்வி துறை இணைந்து மேற்கொண்டு வருகின்றனர். பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுக்கு சிறப்பு முகக்கவசங்களை வழங்க வேண்டும் என்று முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். மேலும் இதுப்போன்ற முகக்கவசங்களை போதுமான அளவு சேமித்து வைத்துக்கொள்ளுமாறு பள்ளி நிர்வாகித்திடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

Leave A Reply

Your email address will not be published.