அரசு சார்பு சிறுபான்மை எம்.பி.க்கள் துபாய் சென்றது ஏன்?

அரசாங்கத்தை ஆதரிக்கும் தமிழ் -முஸ்லிம் கட்சிகளின் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் திடீரென வெளிநாடு சென்றுவிட்டனர்.
அவர்கள் துபாய்க்கு சென்றுவிட்டதாக வெளியான தகவல்கள் அரசின் கவனத்தை ஈர்த்துள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் அரச அமைச்சர் உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை துபாய்க்கு செல்ல உள்ளனர். இவர்கள் ஏன் திடீரென துபாய் பயணமானார்கள் என தெரியவில்லை.
அவர்கள் அனைவரும் தமிழ் முஸ்லிம் கட்சிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, பின்னர் அரசாங்கத்தை ஆதரிக்க முன்வந்துள்ளோர் என்பது குறிப்பிடத்தக்கது.