ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளருடன் ஜனாதிபதி சந்திப்பு.

ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக, நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரெஸை சந்தித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதன்போது, நாடுகளுக்கிடையே ஒற்றுமையை ஊக்குவிக்கும் வகையில் இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் சபை தனது முழு ஆதரவை வழங்கும் என ஐநா பொதுச்செயலாளர், ஜனாதிபதியிடம் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் தலைமையகத்திற்கு வந்த ஜனாதிபதிக்கு சிறப்பான வரவேற்பை ஐநா பொதுச் செயலாளர் வழங்கியதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
1978 இல் அகில பாராளுமன்ற சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கைக்கு வந்ததை நினைவு கூர்ந்த அவர், கண்டி, அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் திருகோணமலைக்குச் சென்றதை இதன்போது நினைவு கூர்ந்தார்.