‘அமாதம் சிசலச’ தர்ம உபதேச நிகழ்வு அலரி மாளிகையில் இடம்பெற்றது-!
பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைய சகல பௌர்ணமி தினங்களிலும் நடத்தப்படும் ‘அமாதம் சிசிலச’ தர்ம உபதேசத் தொடரின் 214ஆவது தர்ம உபதேச நிகழ்வு இன்று (20) அலரி மாளிகையில் நடைபெற்றது.
புத்தபெருமானுக்கு மலர் பூஜை நிகழ்த்தியதை தொடர்ந்து தர்ம உபதேசம் நிகழ்த்துவதற்காக வருகைத்தந்த ராமஞ்ஞா மஹா நிகாயவின் அனுநாயக்கர் வணக்கத்திற்குரிய மெதகமுவே விஜய மைத்திரி தேரரை கௌரவ பிரதமரின் பாரியார் திருமதி. ஷிரந்தி ராஜபக்க்ஷ அவர்கள் வரவேற்றார்.
பௌத்த மதத்தினூடாக கிடைக்கும் மன அமைதியை உலக மக்கள் அனைவருக்கும் கிடைக்கப்பெறச் செய்யும் உன்னத நோக்கத்தில் சகல பௌர்ணமி தினங்களிலும் ‘அமாதம் சிசிலச’ தர்ம உபதேச நிகழ்வு நடத்தப்படுகிறது.
பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் எண்ணக்கருவிற்கமைய ஆரம்பிக்கப்பட்ட ‘அமாதம் சிசிலச’ தர்ம உபதேசத் தொடர் தொடர்ச்சியாக சகல பௌர்ணமி தினங்களிலும் நடத்தப்பட்டு வருகின்றமையை பாராட்டிய ராமஞ்ஞா மஹா நிகாயவின் அனுநாயக்கர் வணக்கத்திற்குரிய மெதகமுவே விஜய மைத்திரி தேரர், ஒரு அரச தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் நாட்டிற்காக உன்னத சேவையாற்றி வருவதாக சுட்டிக்காட்டினார்.
மன்னர் காலத்தின் பின்னர் ஒரு அரச தலைவராக மக்களுடன் மிக நெருக்கமாக இந்தளவிற்கு மக்களுக்கு சேவையாற்றக் கூடிய தலைவரொருவரை கண்டறிவது என்பது மிகவும் கடினமாகும் எனவும் வணக்கத்திற்குரிய தேரர் குறிப்பிட்டார்.
சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றி நடத்தப்பட்ட ‘அமாதம் சிசிலச’ தர்ம உபதேச நிகழ்வில் பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்க்ஷ உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டனர்.