தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலில் அஞ்சலி செலுத்துவோருக்கு மறைமுகமாக அச்சுறுத்தல்!
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்திலுள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவோருக்கு மறைமுகமாக அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
அகிம்சை போராளி தியாக தீபம் திலீபனின் 34ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வானது தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தொடர்ச்சியாக நேற்றைய தினம் ஐந்தாம் நாள் நினைவேந்தலின் போதும் நினைவேந்தலில் ஈடுபட்டவர்களை அச்சுறுத்தும் வகையில் சிறிலங்கா இராணுவ உளவுத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதுடன் நினைவேந்தலில் பங்குபற்றியவர்களை புகைப்படங்களும் எடுத்துள்ளனர்.
நினைவேந்தல்களை தடுக்கும் அரசாங்கம் மற்றும் புலனாய்வு பிரிவினரின் செயற்பாடுகளுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.