சாராயக் கடைகளை திறந்த முட்டாள்கள் யார் – கீதா குமாரசிங்க
மொட்டு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க, மதுக்கடைகளைத் திறந்திருந்தது விஞ்ஞான அமைச்சரவையை நியமிப்பது போன்றது எனக் குறிப்பிட்டுள்ளார்.
சிறிது சிறிதாக தண்ணீரை சேகரித்து வந்த ஒரு குளத்தின் குளக்கட்டை உடைத்து பயிர்களை அழிய வைப்பது போன்ற ஒரு செயலே சாராயக் கடைகளை திறந்தது , யார் இந்த முட்டாள்தனமான முடிவுகளை எடுக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள விரும்புவதாகவும், இதுபோன்ற நடவடிக்கைகளால் நாடாளுமன்ற உறுப்பினரான தன்னால் தனது பகுதிக்கு கூட செல்ல முடியாமல் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பென்தோட்டையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இக்கருத்தை பகிர்ந்து கொண்டார்.
இந்த கொரோனா நேரத்தில் ஒரு மதுக்கடையைத் திறப்பது ஏற்புடையதல்ல என்பதை எந்த முட்டாளும் புரிந்துகொள்வான் என்றும் ஒரு குழந்தை கூட அதைச் சொல்லும் என்றும் அவர் மேலும் விசனப்பட்டார்.