பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டால் வைரஸ் பரவல் மீண்டும் தீவிரமாகும்!
“நாட்டில் மதுபானசாலைகள் திறக்கப்படுவதால் அதன்மூலம் மக்களுக்குக் கொரோனா பரவும் அபாயம் உள்ளது. எதிர்காலத்திலும் இந்நிலைமை தொடர்ந்தால் ஆரம்பித்த இடத்துக்கே மீண்டும் செல்லவேண்டிவரும். மாற்றுவழி எதுவும் இல்லை.”
இவ்வாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது :-
“நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளது. வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் மதுபானசாலைகளை திறப்பதற்கு இடமளிக்கப்பட்டமை ஏற்றுக்கொள்ளமுடியாத விடயமாகும்.
மதுபானசாலைகளைத் திறப்பதற்கு கலால் திணைக்கள அதிகாரிகளின் அனுமதி அவசியம். அவர்களின் அனுமதியின்றி அதனைச் செய்ய முடியாது.
எனவே, மதுபானசாலைகள் திறக்கப்படுவதால் அதன்மூலம் மக்களுக்கு கொரோனா பரவும் அபாயம் உள்ளது. எதிர்காலத்திலும் இந்நிலைமை தொடர்ந்தால் ஆரம்பித்த இடத்துக்கே மீண்டும் செல்லவேண்டிவரும். மாற்றுவழியில்லை.
மதுபான சாலைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கும் அதிகாரிகள் அவதானமாகவே இருக்கவேண்டும். மேற்கூறப்பட்ட நிலைமை ஏற்படுவதற்கு இடமளிக்கக்கூடாது” – என்றார்.